நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்– தெலுங்கு நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டனாக ஜீவா அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு நடிகர் அணி கேப்டன் ஆகாஷ்.
இரண்டு அணிகளிலும் பங்கேற்கும் நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் பெயர் ‘காக்க தியா கோப்பை’.இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் தொகை முழுவதும், நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.