நல்லதண்ணியிலிருந்து புனித யாத்திரை ஆரம்பம்

258

சிவனொளிபாத மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சமன் தெய்வத்தின் திருவுருவ புனித பொருட்கள் 23.05.2016 காலை நல்லதன்னி பௌத்த விகாரையிலிருத்து வாகன பவனியாக பெல்மடுல்ல ரஜ மகா விகாரைக்கு எடுத்துசெல்லப்படுகின்றது.

சிவனொளிபாதைமலை பருவ காலம் 22 ம் திகதியுடன் நிறைவு பெற்றதையடுத்து பெல்மடுல்லை விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித பொருட்கள் மீண்டு கொண்டு செல்லும் வகையில் சிவனொளி பாதமலை உச்சியிலிருந்து புனித பொருட்கள் நல்லதண்ணி பௌத்த விகாரையில் வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் 23 ம் திகதி காலை இரு வழி பயணமாக நோர்வூட்  -பொகவந்தாலா வழியாகவும் லக்ஷபான – அவிசாவளை வழியாகவும் புனித பொருள் கொண்டு வரும் வாகனபவனி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

e8922940-5fa0-43d0-a1cb-ebaadf3cbc1a

SHARE