நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனுமதி வழங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.கவின் விசேட சம்மேளனத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை – நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் மாதுளுவாவே சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், பாட்டாலி சம்பிக்க ரணவக, ஹிருணிகா பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டீ.எஸ். குணவர்தன உட்பட 49 சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திடவுள்ளதாக நம்பப்படுகின்றது. இவர்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியுள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.