நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி

291

நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பமாவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பொற்காலம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது.

இன்று சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்துடன் நல்லாட்சி அராங்கத்தின் முடிவு ஆரம்பமாகும்.

மக்களின் ஆணையை இந்த அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நலன்கள் வழங்கப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தின் ஆயுட் காலம் மிகவும் வரையறுக்கப்பட்டதாக அமைந்துவிடும்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அமைத்து ஆட்சி நடத்தினாலும் மைத்திரிபாலவினால் நாட்டை ஆட்சி செய்து நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.

பல தடவைகள் ரணில் பிரதமராக பதவி வகித்த போதிலும் ஒரு தடவையேனும் பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்க சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE