நல்லாட்சி அரசாங்கத்தில் ஹிருனிக்காவின் மாமி ராஜதந்திரியாகிறார்

319
சிறிசேன- ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது.

இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி குணரட்ன அமரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.

இவர் ஹிருனிக்காவின் தந்தையான பாரத லச்மன் பிரேமசந்திரவின் சகோதரியாவார்.

இது தொடர்பில் கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியுறவு அமைச்சை வினவியபோதும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாம் நியமனக்கடிதத்துக்காக காத்திருப்பதாக சுவர்ணா குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சுவர்ணாவை பொறுத்தவரை அவர் இதற்கு முன்னர் எந்தவொரு ராஜதந்திர பதவியையும் கொண்டிருக்காத அனுபவமற்றவர் என்று ஊடகம் தெரிவித்துள்ளது.

SHARE