நல்லாட்சி அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி.யின் உறுப்பினரும், ஊழல் மோசடிகளுக்கு எதிரான அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கம் பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய கள்வர்களை தண்டிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் இட்பெற்ற குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசாங்கம் வேண்டுமென்றே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை காலம் தாழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லலித் வீரதுங்க போன்ற அரச ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.