இன, மதம்,மொழி, சாதி, வர்ண பேதங்கள் இல்லாத விளையாட்டு மைதானம் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் வைபவம் ஒன்றில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இடையில், சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் வேலைத்திட்டத்தில் விளையாட்டுத்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு மிகவும் உயர்ந்தது.
நல்லிணக்கத்தை வார்த்தைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதனை செயற்படுத்தும் மட்டத்திற்கு கொண்டு வர கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் உச்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.