நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம்! இலங்கை அரசாங்கம்

179

இலங்கையின் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக சமூகத்தின் அதிகாரசபையின் 20வது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

எனவே இனப்பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளை எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் காரணமாக இலங்கையில், அரசியல் பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு என்பன ஏற்படும் என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் இல்லை.

எனினும் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை சர்வதேச நியமத்தின் அடிப்படையில் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE