நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும்

237

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது நாட்டின் நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சந்திரிக்கா, அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் புதிய அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான தமிழர்கள் சிங்களம் பேசுவதில்லை எனவும், சிங்களவர்களும் தமிழ் பேசுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில மொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் காணப்பட்டாலும் இணைப்பு மொழிகள் காணப்படுவதனால் மொழிப் பிரச்சினை சற்றே குறைவாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தமது வீடு கண்காணிக்கப்பட்டதாகவும், தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், எந்தவிதமான சுதந்திரமும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை எற்றுக்கொண்டதன் பின்னர் அவ்வாறான நிலைமை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE