நல்லிணக்கத்தை ஏற்படுத்த அதிகாரப் பகிர்வு மிக முக்கியமானது – இந்தியா

306

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு மிக முக்கியமானது என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட விவாதங்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு பொறிமுறைமை மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.
ஸ்திரமான நல்லிணக்கத்தை உருவாக்க அதிகாரப் பகிர்வு முக்கியமானத என கருதுவதாக இந்திய பிரதிநிதி அஜித் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை மெய்யான நல்லிணக்கத்தை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பல்லின, பல்மத சமூகத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்சியாக இந்தியா ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அனைவரும் கௌவரமானகவும் சுபீட்சமாகவும் வாழக்;கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE