நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழீழத்திற்கான பின்னணி உருவாக்கப்படுகின்றது!– குணதாச அமரசேகர

322
Gunadasa-Amarasekara
நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழீழத்திற்கான் பின்னணி உருவாக்கப்படுகின்றது என தேசிய அமைப்புக்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர் டொக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

பிரிவிணைவாதம் தற்போது பிரபாகரனின் முறைக்கு மாறுபட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கம் படையினரை அகற்றுகின்றனர், புலனாய்வுப் பிரிவினரை பலவீனப்படுத்துகின்றனர்.

இதற்கிடையில் வடக்கிலிருக்கும் சிங்கள மக்கள் இந்தப் பக்கம் வருகின்றனர். நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழீழத்தை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கு எதிரான அனைவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வடக்கு கிழக்கை பிரித்து கொடுத்து அதில் முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது. அதற்காகவே இந்த அரசாங்கத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்
ஆதரவளித்தன.

போர் ஆரம்பிக்க முன்னதாக நாட்டில் நிலவிய நிலைமைகளே தற்போது நிலவுகின்றன. சாவகச்சேரியில் குண்டு மீட்பைப் போன்றே சிங்கள மக்கள் வடக்கிலிருந்து வெளியேறுகின்றனர்.

இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்துள்ளது. தமிழ் இனவாதிகளுக்கும் மேற்குலக நாட்டவருக்கும் தேவையான வகையிலேயே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பாதூகத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரின் பிரிவினைவாத சிந்தனைகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கோரிக்கைக்கு இணங்கியும் பல பிரிவினைவாத செயற்பாடுகளை உள்நாட்டில் முன்னெடுக்கின்றது.

இந்த நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார்.  அதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு அவரை விசாரணை செய்தது.

ஆனால்  இது முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் செயற்பாடு அல்லவென திட்டவட்டமாக கூறும் சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை இதுவரையில் விசாரணை செய்யவில்லை. இது பிரிவினை வாதிகளை வலுப்படுத்தும் செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.

SHARE