நல்லிணக்க நடவடிக்கைகளில் அரசாங்கம் நியாயமாக நடக்கவில்லை!- கத்தோலிக்க குருமார் குற்றச்சாட்டு

287
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை என்று கத்தோலிக்க மதகுருமார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

வணக்கத்துக்குரிய அருட்தந்தை மங்களராஜா, இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழர்களின் பிரச்சினையில் ஆழமான நடவடிக்கைகளே தீர்வுக்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வணக்கத்துக்குரிய தலங்கள் உள்ள பிரதேசங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னேற்றமாக செய்திருக்கிறது.

எனினும் சிறிய இடங்களையே அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

பாரிய பிரதேசங்கள் விடுவிக்கப்படவில்லை என்று அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு தீவிரவாதக் குழுக்களால் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்றாலும், அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நல்லெண்ணத்தை காட்ட முயல வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியலை முன்னிலைப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

 

SHARE