
நல்லிணக்கத்துக்கான வடிவம், உண்மையை கண்டறிதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுக்க நல்லிணக்க பொறிமுறை செயலணி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணி, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கிறது.
பொதுமக்களின் ஆலோசனைகள், தனிப்பட்ட வகையிலோ அல்லது குழுவாகவோ, அமைப்பாகவோ சமர்ப்பிக்கப்படலாம்.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த ஆலோசனைகள் அமையலாம்.
இந்த ஆலோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அவை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
எனவே ஆலோசனைகள் எதிர்வரும் மே முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று செயலணி கோரியுள்ளது.
ஆலோசனைகள், Secretariat for Coordinating Reconciliation Mechanisms, Republic building, Sir Baron Jayathilaka Mw., Colombo 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.