வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் 25 பாதுகாப்புக் கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாளை இடம்பெறவுள்ள மஞ்சள் திருவிழாவிலிருந்து விஷேட திருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகின்றனர். எனினும், ஆலயத்திற்கு திருடர்களும் வருகைத் தருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்களுக்காக 500 பொலிஸார் கடமையில் ஈடுப்டுத்தப்பட்டுள்ள நிலையில் 25 பாதுகாப்பு கண்காணிப்புக் கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்று அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரை ஆலயச் சூழலில் பாதுகாப்புப் பலப்படுத்தபட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.