நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா காரணமாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு சுமார் இரண்டு கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகரசபையினால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அறவீடு செய்யப்பட்ட கட்டணங்களின் ஊடாக இவ்வாறு வருமானம் திரட்டப்பட்டுள்ளது.
தற்காலிக விற்பனை கூடங்கள், சைக்கிள் மோட்டார் வாகனத் தரிப்பிடங்கள் விளம்பர பிரச்சார பதாகைகள் ஆயுர்வேத மருந்து சஞ்சிகை விற்பனை உட்கட்டுமான வசதிகள் போன்றவற்றின் ஊடாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மாநகரசபையின் சேவைகளுக்காக மொத்தமாக ஒரு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழுநூற்று பதினாறு ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
செலவுகளின் பின்னர் நிகர லாபமாக சுமார் ஒரு கோடியே பதினேழு இலட்சத்து பதின்மூன்றாயிரத்து முன்னூற்று ஐம்பத்து எட்டு ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் நல்லூர் உற்சவத்தின் ஊடான வருமானம் சுமார் 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.