ஒட்டுசுட்டான் இத்திமடுப்பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் 3 பேர்கொண்ட கொள்ளையர் கூட்டம் வீடு புகுந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்களும், காசும் களவாடப்பட்டு அவர்களின் உடுப்புக்கள், பெட்டிகள், அலுமாரிகள் சேதப்படுத்திவிட்டு உரிமையாளர்களை வீட்டுக்குள் பூட்டிவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளையும் களவு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.