நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
கொரதோட்ட பிரதேசத்தின் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று (05.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கட்டட பொருட்கள் கடைக்கு முன்னால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின், தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகமுவ பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.