
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக ஆப்பிள் நிகழ்வுகள் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் பிராசஸர் கொண்ட முதல் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ என கணித்திருந்தார்.

ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பவர் மேனேஜ்மென்ட் வழங்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.
அந்த வகையில் இந்த பிராசஸர் கொண்ட சாதனம் நீண்ட பேட்டரி பேக்கப், அதிக பாதுகாப்பு வழங்கும். மேலும் இதில் தரமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் உயர் ரக ஜிபியு, நியூரன் என்ஜின் மற்றும் மெஷின் லேர்னிங் அக்செல்லரேட்டர்கள், வீடியோ, டிஸ்ப்ளே மற்றும் இமேஜ் பிராசஸிங் என்ஜின்களை கொண்டிருக்கும்.