தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதி தொழிற்சந்தை ஒன்றை நடத்தவுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நவம்பர் 27ஆம் திகதி வவுனியா, குருமன்காடு, கலைமகள் மைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை இத் தொழிற் சந்தை இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மரணித்த மாவீரர்கள் நினைவு கூரும் நவம்பர் 27ஆம் திகதி வடக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெறும் பரீட்சைகளை நிறுத்தி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழிற் சந்தை ஒன்றினை அத்தினத்தில் நடத்த முனைவது மண்ணுக்காக மரணித்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.