நாகூர் பிரியாணி சர்ச்சை டுவிட்டிற்கு சித்தார்த் அதிரடி விளக்கம்

319

 சித்தார்த் செய்த டுவிட் ஒன்று சமீபத்தில் பெரிய பிரச்சனையை சந்தித்தது. இதில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது’ என குறிப்பிட்டுயிருந்தார்.

இந்நிலையில் இன்று ஜில் ஜங் ஜக் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் அந்த சர்ச்சையான டுவிட் குறித்து சித்தார்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு டுவிட் செய்யவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் நினைத்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்’ என தெரிவித்தார்.

SHARE