நாங்க இப்படிதானுங்க!: நாடறிந்த நடாலின் பொறுமை

531
உலகம் முழுவதிலும் உள்ள, ரபேல் நடாலின் கோடிக்கணக்கான ரசிகர்களிடம், ‘நடாலிடம் பிடித்த விஷயம் என்ன…’ என்று கேட்டால், அவரின் அசாத்திய பொறுமையும், பிட்னெசும் என்று சொல்வர்.

நெருங்கிய உறவினர்கள் பலர், தொழில் முறை விளையாட்டு வீரர்கள். ரபேலுக்கு இயல்பிலேயே டென்னிசில் திறமை இருப்பதை, மூன்று வயதிலேயே கண்டுபிடித்து, பயிற்சி ஆரம்பித்து விட்டனர். 15 வயதிலிருந்து, கடந்த, 16 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார்.
டென்னிஸ், உடற்பயிற்சி, டயட் என, ரபேலுக்கென்றே பிரத்யேக அட்டவணை தயாரித்து இருகின்றனர், அவருடைய பயிற்சியாளர்களும், டிரைனர்களும். ஆண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்வதால், ‘பிட்’டாக இருக்கிறார்.
போட்டி இல்லாத நாட்களில், காலை, 8:00 மணிக்கு காலை உணவு, அடுத்த ஒரு மணி நேரத்தில் டென்னிஸ் பயிற்சி துவங்கி, மதியம், 1:30 மணி வரை விடாமல் பயிற்சி செய்கிறார். அடுத்த இரண்டு மணி நேர ஓய்விற்குப் பின், ‘ஜிம்’மில் பயிற்சி துவங்கும்.

ரபேல் நடால், டென்னிஸ்

SHARE