நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும்

305

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Untitled89-600x384

நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மக்கள் தங்களது அறிவு, புத்திகூர்மை மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முன் அனுபவங்களை வைத்து இந்த தெரிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ‘அரசியல்வாதிகள் மக்களுக்கான தங்களது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக’ குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் இராஜதந்திரிகள், அவர்களது பதவிகளின் கடமைப் பொறுப்புக்களை ஏற்கின்றபோது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

SHARE