நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் பொலிசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமர சிங்கவிடமும் வாக்குமூலங்களைப் பெற குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளே வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.