பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர், ஹீதர் நுவேட்வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எவர் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, இலங்கைமக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அனுமதிக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.