நாடாளுமன்றின் எதிர்க்கட்சி தலைவர் யார்? பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

369

கொழும்பு அரசியலில் பெரும் பூதாகரமாகி இருந்த விடயத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கமைய எதிர்க்கட்சி தலைவராக வேறு ஒருவரை நியமிக்க முடியாதென சபாநாயகர் இன்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புகள் அல்லது மரபுகளுக்கு அமைய மாற்றங்களை மேற்கொள்ள முடியாதென சபாநாயகர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய மரபு அல்லது உலகின் வேறு நாடுகளின் பாராளுமன்ற மரபுகளுக்கமைய அதனை செய்ய முடியாதென சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் வழங்கும் நேரம் மற்றும் நிறைவேற்ற குழு கூட்டங்களின் போது கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

சமகால எதிர்க்கட்சி கட்சி தலைவர் இரா.சம்பந்தனை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செயற்படும் கூட்டு எதிக்கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE