நாடாளுமன்றின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறான சம்பவங்கள் இத்துடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த சம்பவம் வருத்தமளிக்கின்றது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
அவையின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
