நாடாளுமன்றில் அமளி துமளி! சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு

233

 

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் கடந்த வௌ்ளிக்கிழமை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதுடன், இன்று மீண்டும் மற்றுமொரு புத்தகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் எது சரியான புத்தகம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு புத்தகங்களின் உள்ளடக்கத்திலும் வித்தியாசம் காணப்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது சபையில் அமளி துமளி ஏற்பட்டதுடன் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் போதிய தெளிவினை பெற்றுக் கொள்வது அவசியம் என்பதால் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

SHARE