நாடாளுமன்றில் மஹிந்த பிரதமராக உரையாற்ற முடியாது:

126

சிறிலங்கா நாடாளுமன்றில் நவம்பர் 14 ஆம் திகதி புதன் கிழமைநிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயற்பட எவராவது முற்பட்டால்அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.

சிறிலங்கா அரச தலைவரினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றில் ஜே.வி.பி யினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் 102 பேரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும், ஜே.வி.பி யின் ஆறு பேருமாகமொத்தம் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டிருந்தனர்.

எனினும் இந்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதுஅதற்கு எதிராக ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர்ந்திருந்த மஹிந்தவாதிகள் கடும்எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தையும், வாக்கெடுப்பையும்நடத்தவிடாது கூச்சலிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாது சபாநாயகர் கரு ஜயசூரிய வாய் மூலவாக்கெடுப்பு நடத்தி மஹிந்த தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கத்தவறிவிட்டதாக அறிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மஹிந்தவாதிகள் நாடாளுமன்றின் சபைநடுவே சென்று சபாநாயகரின் ஆசனத்திற்கு முன்னால் நின்ற வண்ணம் சபாநாயகரின்நடவடிக்கை சம்பிரதாயத்திற்கு விரோதமானது என்றும், எதேட்சாதிகாரமானதுஎன்றும் குறிப்பிட்டு திட்டித் தீர்த்தனர்.

இந்த நிலையில் சபை நடவடிக்கைகளை தொடர முடியாது என்று கூறிநவம்பர் 15 ஆம் திகதியான வியாழன் முற்பகல் பத்து மணி வரை நாடாளுமன்றத்தை சபாநாயகர்ஒத்திவைத்தார்.

ஆனால் தாம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான இன்றையநாடாளுமன்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மஹிந்த தரப்பினர் அறிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் அவர் தலைமையிலானஅரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் பதிலளித்து விசேட உரையொன்றை ஆற்றுவார்என்று மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார இன்று மாலைஅறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ பெரேரா, நாடாளுமன்றில்பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகஎவராவது செயற்பட முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றுஎச்சரித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளநிலையில், பெரும்பான்மையில்லாத ஒருவர் பிரதமராக தொடர்ந்தும் செயற்படமுடியாது என்று சுட்டிக்காட்டிய அஜீத் பீ பெரேரா, அவ்வாறுஒருவர் செயற்படுவாரானால் அது சட்டவிரோதமான செயலாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

அதனால் அப்படியான நிகழ்வொன்று இடம்பெறுமாயின் அதற்கு எதிராகஉடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் சட்டத்தரணியான அஜீத் பீ பெரோாஎச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியானஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாடடலி சம்பிக்கரணவக்கவும், மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக செயற்படமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாடாளுமன்றில் மஹிந்தவால் பிரதமராக விசேட உரையொன்றைஆற்ற முடியாது என்று அடித்துக் கூறி சம்பிக்க ரணவக்க, நம்பிக்கையில்லாப்பிரேரணை வெற்றிபெற்றது என்று சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல் மஹிந்தவினதுபிரதமர் பதவி மாத்திரமன்றி அவரது அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

எனினும் நாட்டின் பிரதமர் ஒருவரை நியமிப்பதும், பிரதமர்ஒருவரை பதவியில் இருந்து நீக்குவதும் ஜனாதிபதியான தனக்கு இருக்கும் அதிகாரம் என்றுஅறிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இதற்கான முழுமையான அதிகாரமும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கின்றதோ அல்லதுஇல்லையே தான் பிரதமராக ஒருவரை நியமித்தால் அதனை நாடாளுமன்றம் கேள்விக்கு உட்படுத்தமுடியாது என்றும் மிகவும் கடுமையான தொனியில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கஅனுப்பியிருந்த பதில் கடிதத்தில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

SHARE