நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை விரைவில்

199
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை விரைவில் உருவாக்கப்படுமென ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான ஆவணங்கள் ஏற்கனவே தயார்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதியமைச்சர், வெகு விரைவில் அது சட்டமாக்கப்படுமென தெரிவித்தார்.
அண்மைய காலமாக நாடாளுமன்றில் அதன் உறுப்பினர்கள் செயற்படும் விதமானது பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதோடு, சபாநாயகர் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒரு உயரிய சபையில் இவ்வாறு நடந்துகொள்வதானது, நாட்டு மக்களின் நகைப்பிற்கு உள்ளாகும் செயலென தெரிவித்துள்ள சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றின் அவசியம் குறித்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE