இஸ்ரேலில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானம்

193

இஸ்ரேலில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு 104 இலங்கையர் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர்களில் 60 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், இன்னும் 30 பேருக்கு எதிராக வழக்குப் பதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இஸ்ரேலின் விவசாயப் பண்ணைகளில் பணியாற்ற ஆறுமாத வீசாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையர் பலர் தங்கள் வீசாக்காலம் நிறைவுற்ற பின்னரும் அங்கு தங்கியிருப்பதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு கோட்டா ரத்துச் செய்யப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியிலும் இந்த விடயம் இலங்கைக்குப் பாதிப்பாக அமையக்கூடும் என்பதன் காரணமாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு நடவடிக்கை ஆரம்பமானதன் பின்னர் தற்போதைக்கு 09 பேர் நாடுதிரும்பியுள்ளனர். இன்னும் ஐந்து பேர் நாடுதிரும்பவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE