தென்கொரியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, தென்கொரியாவில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தென்கொரிய பிரதமர் ஹூவான் கியோ ஆனிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தென்கொரியா உதவிகளை வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ தென்கொரிய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் தென்கொரியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.