நாடு முழுவதிலும் நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட குடும்பம் கைது

208

நாடு முழுவதிலும் காணப்படும் நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட குடும்பம் ஒன்றை கொச்சிக்கடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கணவன், மனைவி, பிள்ளைகள், கணவரின் சகோதரர் என குடும்ப உறுப்பினர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பல நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை தங்க நகைக் கடை ஒன்றில் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நேற்று இந்த குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்த நபர்களின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

56 வயதான மொஹமட் மசீட் மொஹமட் ரசாக், 34 வயதான பாதிமா சர்மிளா, 30 வயதான அப்துல் கரீம் மற்றும் 14 வயதான பாதிமா செய்னா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சிக்கடை நகையகம் ஒன்றிலிருந்து தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டமை சீ.சீ.ரீ.வி கமரா பதிவுகள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE