நாடு முழுவதிலும் போராட்டம் நடாத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

307
கூட்டு எதிர்க்கட்சி நாடு முழுவதிலும் போராட்டங்களை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் இறப்பர், தேயிலை, நெல் ஆகியனவற்றுக்கு சிறந்த விலையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் போராட்டம் நடாத்தப்பட உள்ளது.

புதிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தேயிலை, இறப்பர் மற்றும் நெல் ஆகியனவற்றுக்கு உரிய விலையை வழங்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கப்படும்.

அண்மையில் ஹொரணை பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் அடுத்த கட்டமாக மாத்தறையில் நடைபெறவுள்ளது.

குறிப்பாக தேயிலை, இறப்பர் மற்றும் நெல் பயிர்ச் செய்யப்படும் இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

மேலும் அமைச்சுக்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக தகவல்களைத் திரட்டி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE