நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேஸில் அரசாங்கத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் தூதுவருக்கான அறிமுக ஆவணத்தை பிரேஸில் ஜனாதிபதி டிலிமா ரவ்சொப்பிடம் ஒப்படைத்தார்.
ஜகத் ஜயசூரியவுடன் மேலும் 21 தூதுவர்கள் அறிமுக ஆவணங்களை ஜனாதிபதி ரவ்சொப்பிடம் ஒப்படைத்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் வாழ்த்துக்களையும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பிரேஸில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் பிரேஸிலுக்கும் இடையில் நிலவி வரும் தொடர்புகள் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் திட்டங்கள் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஜெனரல் ஜகத் ஜயசூரிய, பிரேஸில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்