நாட்டின் உழைக்கும் மக்களை கடன்காரர்களாக்க முட்டை போடுவது போல் பிரதமர் வட் வரியை அதிகரித்துள்ளார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

271

(க.கிஷாந்தன்)

நாட்டின் உழைக்கும் மக்களை கடன்காரர்களாக்க முட்டை போடுவது போல் பிரதமர் வட் வரியை அதிகரித்துள்ளார்.

அரசாங்கம் இம்மக்களுக்கு உணவு கொடுப்பதில்லை. மக்கள் உழைத்தே அன்றாடம் உணவு உட்கொள்கின்றனர் என்பது தான் உண்மை என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்தார்.

பத்தனை – போகாவத்தை பெரமான பகுதியில் 16.03.2016 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்…

வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற இன்னும் பல அபிவிருத்திகளில் முன்னெடுப்பதற்காகவே மக்கள் வாக்களித்து பதவி அந்தஸ்தையும் கொடுத்து பாராளுமன்றம் அனுப்புகின்றனர்.

இது தவிர மக்களுடைய  வாழ்க்கை சுமைகளில் அரசு எத்தகைய முன்னெடுப்புகளை செய்துள்ளது என கேள்வி எழுப்பி உரையாற்றுகையில் இரசாயண உரத்தை கூட வழங்க முடியாத இந்த அரசு கூட்டு பசளை உரங்களை இட்டு விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளை வழியுறுத்துவது வேடிக்கையான விடயமாகும்.

உழைப்பது மக்கள் ஆனால் சுரண்டி வாழ்வது நீங்கள் வாக்களித்த அரசியல்வாதிகளாக இருக்க இடம் கொடுக்க கூடாது. இதற்கு எதிர்கால நடவடிக்கை ஒன்று தேவைப்படுகின்றது.

விவசாயம் வேண்டாம் என்பதனால் தான் வெளிநாட்டு பொருள் இறக்குமதிகள் நமது நாட்டிற்கு இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. ஆனால் வரி சுமையை மாத்திரம் நமது நாட்டின் மக்கள் மீது திணிப்பது ஏன் என தெரிவித்த இவர் நேபாள நாட்டிற்கு சென்றேன். அங்கு மின்சாரம் கிடைப்பது என்றால் அங்கு வாழும் மக்களுக்கு அழப்பெரிய ஆனந்தம். ஆனால் அங்கு தண்ணீர்க்கு பஞ்சம். எண்ணெய் வளம் இல்லை. அங்கு மக்கள் வாழ்கின்றனர்.

இலங்கையில் வாழும் நமது மக்கள் இவ்விடயங்களில் புண்ணியம் செய்தவர்கள். ஆனால் இவர்கள் பாவம் செய்யும் அரசியல் தலைமைகளினால் அனைத்தையும் இழந்து வருகின்றனர்.

இன்று நாட்டின் மின்சார பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பான சபையின் தலைவர் தான் பதவி விலகுவதாக பூச்சாண்டி காட்டுகின்றார். இவர் பதவி விலகினாலும் மின்சாரம் தடை ஏற்பட தான் செய்யும். தடைப்பட்ட மின்சாரம் தொடர்பாக விவரங்களை அறிந்து கொள்வதற்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது 9 பேரை விளக்கமளிக்கப்பதற்காக ஜே.வி.பி அழைத்துள்ளது.

அன்று முதல் இன்று வரை 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கான மாதிவெலையில் அமைக்கப்பட்டுள்ள 225 குடியிருப்புகளும் இருக்கின்றது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியிருப்புகள் அதிகமாக தேவை என அரசாங்கம் கோருவது ஏன் ?

அத்தோடு 50,000 ரூபாய் மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதி கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் திட்டம் வகுப்பது எதற்கு ? இவ்வாறான நடைமுறையில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

இதை அனைத்தையும் தவிர்த்து ஒரு நல்ல அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சக்தியை கிராம மட்டத்திலிருந்து கொண்டு வருவதற்கான முன்கூடிய வேலைத்திட்டத்தினை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து செல்கின்றது என்றார்.

4202a74e-5295-4f8a-9acc-fcce01687037 a83edd03-d41a-4544-a16b-e0224d9654a2 e5a95444-2b39-4db6-b851-248dfcf13183

SHARE