நாட்டின் பாரிய கடன் தொகை …..

251

இந்த நாட்டு மக்கள் சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டியதாகவுள்ள பாரிய கடன் தொகைக்கு கடந்த மகிந்த அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டுமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்.மரிக்கார் தெரிவிக்கின்றார்.

நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக கொக்கரிக்கும் மகிந்த அணியினர் இதற்கு யார் காரணமென்பதை சிந்திக்க வேண்டும். தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கமா அல்லது முன்னைய மகிந்த அரசாங்கமா நாட்டை படுகுழியில் தள்ளியதென்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டை நிர்வகிப்பதற்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கிய போது 19 சதவீதமாக இருந்த நாட்டின் வரி வருமானம் 10.2 வீதமாக குறைவடைந்துள்ளது. 2013 இல் நாட்டில் மொத்த வருமானம் 1,153 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும் 1,162 பில்லியன் ரூபா வட்டி தவணைக் கொடுப்பனவாக செலவிடப்பட்டுள்ளது.

உண்மையில் கடந்த அரசின் கடன் தொகை 8,813 பில்லியன் ரூபாவாகும். குறித்த கடன் தொகை எம் மீதே விழுந்துள்ளது. இந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு எமது அரசாங்கத்தின் பதவிக் காலத்திலேயே நாட்டின் பொருளாதரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் ஏற்றுமதி அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளில் எமது ஏற்றுமதியை இரு மடங்குகளாக அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த அரசின் காலத்தில் இல்லாமல் போன ஏற்றுமதி வரிச் சலுகையை (ஜீ.எஸ்.பி) இந்த வருடத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென நம்புகின்றோம்.

நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு பூண்டுள்ளதன் காரணமாக ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இலகுவாக இவ்வருடம் பெற முடியுமென தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

dollar-cash

SHARE