நாட்டின் மொத்த ஆசனம் 225  யானை கூட்டனி 106  வெத்திலை கூட்டனி 95  வீட்டு கூட்டணி 16  ஏணையவை 8 

189

 



106+16 122
95+16 =111

யார் ஆளுவது என்பதை தீர்மானிக்க 113
யாணையோடு வீடு சேர்ந்தால் 122
அதே நேரம் யாணையில் இருந்து 10 ஆசனம் கையோ வெத்திலயோ கூட போனால் 112

வெத்திலயோடு வீடு சேர்ந்த 111
யாணையின் ஆசனம் 10 வந்த 121

எஞ்சிய எட்டு ஆசனமும் யாணையோட சேர்ந்தாளும் யாணைக்கு 120 தான்

இப்பபோ வீட்டின் கையில் தான் வீட்டின் நிழல் யாணைக்கோ கைக்கோ என்று

யாணையின் தலைவருக்கு இரு தல இடி
1 கைமாறப்போகும் 10 சீட்டையும் பாதுகாத்து அதனுடன்
2 வீட்டோடும் பேரம் பேசி வெற்றி கண்டால் இழந்த இடத்தை தனிபெரும்பாண்மையோடுஎடுக்க முடியும்

வெத்திலக்கும் அதே தல இடிதான்
யானையின் 10 ஒடும் எஞ்சிய 8 ஆசனத்தையும் எடுத்தாள் மாத்திரமே 113

இது நடந்த வீட்டின் நிழல் வெத்திலைக்கு தேவை இல்லை
பலரால் நம்பப்பட்டு வந்தது வீட்டின் நிழல் யாணைக்கு தான் என்று அதனால் வடக்கில் வீடு சிதறி வருகிறது

இப்போ யாணையின்
தலைவர் கட்சி தாவப்போகும் அந்த
10 பேரையும் காந்தம் போல் இறுக்கி பிடித்தாள் நன்று

113 காட்டுவதுக்கு கடுமையாய் இரு துருவத்தின் துரும்பும்

வீட்டின் 16 ம்
ஊடக தகவள் சொல்லும்
கட்சி மாறும்
என நம்பப்படும் அந்த 10 தான்

பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்??

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிரதான கட்சிகள் இரண்டும் பிளவுபட்டுள்ள நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த பொது தேர்தல் முடிவுகளுக்கமைய, தற்போது அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் தற்போது கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது வேறு சில கட்சிகளை இணைந்து கொண்டால் மாத்திரமே பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 6 கட்சிகள் மாத்திரமே ஏற்றுக் கொண்டவைகளாகும். அதில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்றுள்ளது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசங்களையும், ஈழ தமிழர் ஜனநாயக கட்சி ஒரு ஆசனத்தை, முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள 106 ஆசனங்களில் ரிசாட் பதியூதின் தலைமை வழங்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரவூப் ஹக்கிம் தலைமைத்துவம் வழங்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட மேலும் சில கட்சிகள் உள்ளடங்குகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அதே நிலைமை காணப்படுகின்றது. அதில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமைத்துவம் வழங்குகின்ற மக்கள் ஐக்கிய முன்னணி உட்பட சில கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் உள்ளனர். மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 95 க்கு மேலதிகமாக, நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 18 ஆசனங்கள் அவசியமாக உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் 106 பேரின் ஆதரவு உள்ள போதிலும், பெறும்பான்மையை வெளிப்படுத்துவதற்கு 7 ஆசனங்கள் அவசியமாக உள்ளது. எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அலுத்கமகே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். ரிஷாட் பதியூதின் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் நடத்தி செல்வதற்கு மஹிந்த ராஜபக்சவுக்கு அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்.

அடுத்து வரும் சில நாட்களில் கட்சிகளின் கூட்டணி தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை நேற்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்டுவதாக ரணில் சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE