நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயார்: ஹிலாரி கிளின்டன் பேச்சு

251

நியூயார்க்: தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் என ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். டொனால்டு டிரம்ப் அதிபர் என்பதை திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் என ஆதரவாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் ஹிலாரி கிளின்டன் தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியுற்றது வலி தான், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும் எனவும் ஹிலாரி கிளின்டன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை. மேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

SHARE