இன்றைய தினமும் நாட்டில் கடுமையான மழை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் சுற்றி நிலவிய தாழமுக்க நிலைமை அகன்று செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.