நாட்டில் ஏற்படும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக இணைந்து தீர்வு வழங்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை சுயாதீன ஆணைக்குழுவாக உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினையும் சுயாதீனமாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் புதிய கலாச்சாரமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.