நாட்டில் நிலவிய பெரிய யுத்தத்திற்கு இதுவே காரணம் எதிர்க்கட்சித் தலைவர்

203

இதுவரை நாட்டு மக்கள் அனைவருடைய சம்மதத்துடனும் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய பெரிய யுத்தத்திற்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் (Julie Bishop) இற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தன் இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதுவரை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய பெரிய யுத்தத்திற்கு காரணம்.

ஆகையால் ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து, தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டுமெனவும், அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென வழியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியமென தெரிவித்துள்ளார்.

 

SHARE