நாட்டில் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

140

நாட்டில் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவசியமாக உள்ள வீதிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்காகவே வற் வரியை அதிகரிக்க நேரிட்டதென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிட்டதாகவும், இதனால் எதிர்வரும் நாட்களில் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE