நாடு முழுவதிலும் உள்ள சிறைக்கூடங்களில் 7,975 சிறைக்கைதிகள் இருப்பதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் .சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது டலஸ் அழகப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதை பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக 2,995 பேரும், கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக 1,211 பேரும் சிறையில் தண்டனைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதுதவிர மதகுருமார் 17 பேரும், தாய்மார் செய்த குற்றங்களுக்காக அவர்களுடன் இணைந்து சிறுவர்கள் 58 பேரும் தற்போது சிறையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்