நாட்டை துண்டாடுவதற்காக நாம் வரவில்லை!- மைத்திரிபால சிறிசேன

211

gg-3-700x427

தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டமையானது, நாட்டை துண்டாடுவதற்காக அல்ல.ஒற்றுமைப்படுத்துவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.

நாட்டின் பிரதான இரண்டு எதிர் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தேசியஅரசாங்கத்தை சிலர் விமர்சிக்கின்றனர்.

இந்த அரசாங்கம் நாட்டைப் பிளவுப்படுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குநாட்டை காட்டிக் கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

பௌத்த மதத்தை அழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

எனினும் அவையாவும் சுயலாபத்துக்காக கூறப்படும் கருத்துக்களாகும் என்றும் மைத்திரிபாலசிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

SHARE