நாட்டை மைத்திரி அல்லது ரணில் ஆகிய இருவரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஸ

179

mahinda-r

நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

விமல் வீரவன்ச ரொஹான் ரத்வத்தேயின் சகோதரர் ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவை மறக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுருத்த ரத்வத்தே மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் நாட்டுக்கு ஆற்றிய சேவை மறக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் சட்டத்தின் பிரகாரமே செயற்பட்டுள்ளார்கள் என்பதே எனது நம்பிக்கை.

அப்படியென்றால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் நான் ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை.

போர் இடம்பெற்ற காலத்தில் அவசரகால சட்டத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கம் காணப்பட்டது.

அந்த காலப்பகுதியில் எமக்கு போதியளவு நாடாளுமன்ற பலம் இருக்கவில்லை.

இதனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இது குறித்து உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டோம்.

இந்த உடன்படிக்கையையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய பொது செயலாளரே கைச்சாத்திட்டிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவைதான் என்ன? இரண்டு தரப்பினரும் என்ன சேவைதான் மக்களுக்கு செய்கின்றார்கள்.

அதைத்தான் முன்னதாகவே கூறியிருந்தேன். ஒன்று ரணிலிடம் இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்து என ஒப்படைக்க வேண்டும்.

அல்லது ஜனாதிபதி இந்த ஆட்சியை பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரணில் சொல்வதனை ஜனாதிபதி கேட்பதில்லை ஜனாதிபதி சொல்வதனை ரணில் கேட்பதில்லை.

மைத்திரி ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE