நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்-எஸ்.பீ.திசாநாயக்க

199

 

 

நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி

செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதன் மூலமாக உற்பத்தி

செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான

வாய்ப்பு ஏற்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளின்

கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி

தேசிய வேலைத் திட்டத்தினூடாக மத்திய மாகாண விவசாய இந்து காலாச்சார அமைச்சின்

ஏற்பாட்டில் மலையக விவசாய மற்றும் விலங்கு வள கண்காட்சி 18-8- 2016

வியாழக்கிழமை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் உத்தியோகப்பூர்வமாக

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால்

ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே

அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிவகைகள்ரூபவ்பழவகைகள்ரூபவ்பூக்கள் உற்பத்தி

செய்யப்படுகின்றன.இவை சந்தையிலும் இலாபகரமாக விற்பனை

செய்யப்பட்டுவருகின்றன. இவைகள் நச்சு தன்மையற்றதாக உற்பத்தி செய்வதற்கு

அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி

காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட புகையிரத பாதை காரணமாக எமது பெருந்தோட்ட

பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலமாக எமது நாட்டுக்கு அந்நிய

செலவாணியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இதிலிருந்து பெற்ற

இலாபத்தைக்கொண்டு எமது நாட்டிலும் பல அபிவிருத்தித் வேலைத்திட்டங்கள்

முன்னெடுக்கப்பட்டது.எனவே இதனை கருத்தில்கொண்டு நானுஓயாவிலிருந்து நுவரெலியா

ஊடாக இராகலை வரை கடந்த காலங்களில் புகைவண்டி சென்ற புகைவண்டி பாதையை அபிவிருத்தி

செய்து புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.அவ்வாறான முயற்சி

சாத்தியப்படுமேயானால் அதன் மூலமாக பெருந்தோட்டத்துறையையும் விவசாயம்

சுற்றுலா ஆகிய துறைகளை மிகவும் இலகுவாக அபிவிருத்தி செய்ய முடியும். எனவே

அதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனவின் கனவுத்திட்டமான விவசாய அபிவிருத்தி மூலம்

குறிப்பாக நச்சுத்தனைமை அற்ற விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குவதன்

மூலம் எமது நாட்டின் விவசாய துறையை முன்னேற்றுவதற்கும் எமது மக்களுக்காக

நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க முடியும். அதன்மூலமாக

நோய்களை கட்டுப்படுத்தி சிறந்த ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்க

முடியும்.மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரனைப் போல ஏனைய மாகாண விவசாய

அமைச்சர்களும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில்

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வது என்பது மிகவும் எளிதான ஒரு காரியமாக

SHARE