விஜய் சேதுபதி முதன் முதலாக தனக்கான கொள்கையில் இருந்து வெளிவந்து நடித்துள்ள படம் நானும் ரவுடி தான். இதுநாள் வரை தாடி, அழுக்கு சட்டை என அணிந்து நடித்தவர் முதன் முதலாக கலர்புல்லான ஒரு படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் தயாரிக்கிறார், போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன்இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார் என்பதை தாண்டி நயன்தாரா நடிக்கிறார் என்றவுடன் தான் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கானது. மேலும், பார்த்திபன், மன்சூர் அலிகான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே இளைஞர்களிடம் குறிப்பாக காதலர்களின் தேசிய கீதமாகவே உள்ளது. டீசர், ட்ரைலர் என அனைத்தும் காதல், நகைச்சுவை என கலை கட்டுகிறது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு குறித்து ரசிகர்களிடம் கேட்கையில் பலரும், விஜய் சேதுபதிக்கு இந்த படம் கண்டிப்பாக வித்தியாசமான படம்.
அவரை இந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம், நயன்தாரா சொந்த குரலில் பேசியது மிகவும் நன்றாக உள்ளது, மொத்தத்தில் செம்ம ஜாலியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றே கூறியுள்ளனர்