நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் மாற்றம்! புதியவர்கள் நியமனம்?

331
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றின் உயர் பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றங்கள் செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இந்த செயலாளர்கள் தொடர்பில் துறைசார் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர்.

புதிய செயலாளர்களை நியமிக்குமாறு குறித்த அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

சில முக்கிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உரிய முறையில் கடமைகளைச் செய்யத் தவறிய அரசாங்கத்தின் இலக்குகளை முன்னெடுக்காத உயர் அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE