நான் அஞ்ச மாட்டேன்- நடிகர் சங்கத்திலிருந்து நீக்கிய பின் மன்சூர் அலிகான் அதிரடி

303

தமிழ் சினிமாவில் தன் வில்லன் நடிப்பால் அனைவரையும் மிரட்டியவர்மன்சூர் அலிகான். இவரை சமீபத்தில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

இதற்கு விளக்கம் தரும் வகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர் ‘நான் வருடம் தோறும் ஏதோ பணம் கட்டவில்லை என்று தூக்கியுள்ளார்கள், அப்படி சங்கத்தில் எந்த விதிமுறையும் இல்லை.

இத்தனை வருடம் நடிகர் சங்கத்தில் இருந்த எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக இந்த முறை விஷால் அணியினர் தான் வெற்றிப்பெறுவார்கள், அதில் மாற்று கருத்தே இல்லை, மேலும், அவர்கள் வெற்றிப்பெற்றால் தான் நாடக நடிகர்களுக்கு ஒரு விடிவுகாலம்.

என்னை சங்கத்தில் இருந்து தூக்கியதால் நான் எங்கும் ஓடிவிட மாட்டேன், அதை எதிர்த்தும் போராட மாட்டேன், நான் நடிகன் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்’ என கூறினார்.

SHARE