நான் எப்படி அதை செய்வேன்? மன்னிப்பு கோரிய மாகாபா ஆனந்த்

293

தொகுப்பாளரும் நடிகருமான மா.கா.பா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உயரம் குறைந்த பெண்களுக்கான ஃபேஷன் ஷோ தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது.

அதற்கு அங்கு வந்திருந்த பலரும் எழுந்து நிற்கவில்லை. அதற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்தை அனைவரும் குறைகூறினர்.

இப்போது அதற்கு விளக்கமளித்துள்ள மாகாபா, “அங்கிருந்த VJ ஒரு ஆந்திரா பொண்ணு.. அவங்களுக்கு அது தமிழ்தாய் வாழ்த்து என்று கூட தெரியாது.. அதனால் அவர் எழுந்து நிற்கவில்லை.. அவர் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் நான் ஒரு தமிழன் நான் எப்படி தமிழ்தாய் வாழ்த்தை அவமதிப்பேன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE